புதன், 6 செப்டம்பர், 2017

மக்களின் குரல் அடிப்படை தேவை

திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான   மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு உள்ள உரிமை  இது இன்று வரை கிடைக்க வில்லை நாங்களும் சென்னையில் வாழுகிறோம்    இதை நம்பலாமா  சென்னை 600019   திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா ஷண்முகம்  நகரில் எங்களுக்கு கிடைக்க வில்லை  ............................................................................................................................1,These waste are throwing by our people only and we expect the corporation people to clean, why These waste are thrown in the drain, I have seen some people put waste food inside the drain. Problem are created by us. We have to find the solution by stopping people who do this  2 , பகுதி ராஜா ஷண்முகம்  நகரில் 10வது தொருவில் கால்வாய் முடி முடப்படாமல் உள்ளது இதனால் கொசுக்கள் பிரச்சனை உள்ளது  இதற்க்கு  பல முறை புகார்  எனது  சார்பாக  தொரிவித்தோன் எந்த  பலனும் இதுவரை  இல்லை இதற்கு  எதவது  நடவடிக்கை எடுக்கும் படி  கோட்டுகொள்கிறோன்  3,Raja shanmugam nagar 5 வது தெருவிலும் தண்ணீர் வரவில்லை. ஊர் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து பொதுவாகதண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். 4.  12வது தெருவில் உள்ள  பிரச்சனை பற்றி தான் முதலில் கூறினோம் ஆனால் அதைப் பற்றி கண்டு கொள்ளாதது போல் தெரிகிறது அதிகாரி பேசும்போதும் 9வது 10வது தெருவின் தேவை  பற்றி மட்டும் முடிவு செய்வதாக தெரிகிறது   எங்களுக்கு தண்ணீர் வேண்டும் 5.லாரி வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாக உள்ளது  அது  குடிக்க ஏற்றது அல்ல 6.10வது தெருவில் தேர்தலுக்கு பிறகு தண்ணீர் தட்டுப்பாடு    அதிகமாக உள்ளது. தெருவின் ஒரு பக்கத்தில் குழாய்களில் மட்டும் எப்போதாவது தண்ணீர் வருகிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   பழைய நிர்வாகம் அமைத்து தந்த குழாய் என்பதால் புதிய நிர்வாகத்திற்கு குழாய் இணைப்பு பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று கூறப்படுகிறது தண்ணீர் லாரியும் சரியாக  வருவது இல்லை இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கோட்டு கொள்கிறோம் 7...12வது தெருவில் தேர்தலுக்கு பிறகு தண்ணீர் தட்டுப்பாடு    அதிகமாக உள்ளது. தெருவின் ஒரு பக்கத்தில் குழாய்களில் மட்டும் எப்போதாவது தண்ணீர் வருகிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   பழைய நிர்வாகம் அமைத்து தந்த குழாய் என்பதால் புதிய நிர்வாகத்திற்கு குழாய் இணைப்பு பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று கூறப்படுகிறது  8 உயர் திரு தலைமை செயலாளர் தமிழ் நாடு அவர்ளுக்கு வணக்கம் சென்னையில் இருக்கிறோம் உலகத்தில் சென்னை பாதுகாக்கப்பட்ட நகரம் இதை தாங்களே அறிவீர்கள் எங்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைத்தால் போதும் சுகாதாரம் நல்ல குடிநீர்  இது கூட எங்களுக்கு கிடைக்க வில்லை கொசு தொல்லை அதிகம் உள்ளது தண்ணீர் சுத்தமாக வர வில்லை நாங்கள்  எங்களின் அடிப்படை உரிமையைத்தான் கேட்கிறோம் இந்த பிரச்சனை நிரந்தரமாக தீர வேண்டும்  முதல்வர் அவர்களுக்கும் மாவட்ட கலைக்டர் அவர்களுக்கும் இந்த தகவல் அனுப்பி வைக்கப்படும்   

திங்கள், 10 ஜூலை, 2017

The plight of the first zone of Chennai 1

திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா சண்முகம் நகர் 1.வது தெரு. 7.வது தெரு 8.வது தெரு 10.வது தெரு  13.வது தெருவில்  இந்த தெருவில் மழை நீர் செல்ல காவய்கள் அமைக்கப்பட்டு உள்ளது  அந்த கவாய்க்கு முடி போடப்படவில்லை இதன் மூலம் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது இதன் மூலம் பலர் உயிர் இழந்து  உள்ளனர் டெங்கு மலேரியா விஷ காச்சல் மூலம் மனித உயிரை பறிக்க காரணமாக இருக்கிறது இந்த காவாய்கள் பலர்  இந்த  காவாய்களில் விழுந்து அடிப்படுகின்றனர் அனைவரின் வீட்டின் முன்பு சுகாதாரம் இல்லை திருவொற்றியூர் நகர மண்டல நிர்வாகம் இதை சீர் செய்ய வேண்டும் தமிழக அரசும் இந்த பிரச்சனைக்கு  தீர்வு தர வேண்டும் சென்னை மண்டலத்தின் முதல் மண்டலமே இது தான்  இங்கே இப்படி ஒரு அவல நிலை  சுகாதார அமைச்சர் சுகாதார அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு தர வேண்டும்  இப்படிக்கு ராஜா சண்முகம் நகர் மக்கள்  

வியாழன், 18 மே, 2017

சென்னை மாநகராட்சி கமிஷனர்

சென்னை  மாநகராட்சி கமிஷனர்   உயர் திரு ஆணையர் அவர்களுக்கு வணக்கம்  திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா சண்முகம் நகர் மக்களின் பிரச்சனை  இது  நாங்கள் வசிக்கும் பகுதியில் தெரு விளக்கு பல எரிய வில்லை பல மின்கம்பங்கள் விழுந்து விடும் நிலையில் உள்ளது  ஒட்டு  மொத்த நகரில் 15.தெருவிலும் இந்த பிரச்சனை உள்ளது எங்களின் நகரின் முக்கிய பிரச்சனைகளின்  இதுவும் ஒன்று சம்மந்த பட்ட அதிகாரிகள் இதற்க்கு உடனடியாக தீர்வு தர வேண்டும் என்பது ஊர் மக்களாகிய எங்களின் விருப்பம் மற்றும் தமிழக அரசும் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தர வேண்டும் இப்படிக்கு ராஜா சண்முகம் நகர் ஊர் மக்கள்  

உயர் திரு தலைமை மின் பொறியாளர் ஜோதிநகர் சென்னை வடக்கு

உயர் திரு தலைமை மின் பொறியாளர்   ஜோதிநகர் சென்னை வடக்கு திருவொற்றியூர் மற்றும் தமிழ் நாடு மின்சார தலைமை பொறியாளர் அவர்களுக்கும் வணக்கம் திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா சண்முகம் நகரில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும்  பல மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது மற்றும் பல தெரு விளக்குகள் பழுது அடைந்து உள்ளது  ஒட்டு மொத்த நகரில் 15.தெருவிலும் இந்த பிரச்சனை உள்ளது எங்களின் நகரின் முக்கிய பிரச்சனைகளின் இதுவும் ஒன்று சம்மந்த பட்ட அதிகாரிகள் இதற்க்கு உடனடியாக தீர்வு தர வேண்டும் என்பது ஊர் மக்களாகிய எங்களின் விருப்பம் மற்றும் தமிழக அரசும் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தர வேண்டும் இப்படிக்கு ராஜா சண்முகம் நகர் ஊர் மக்கள்  

ஞாயிறு, 14 மே, 2017

ராஜா சண்முகம் நகர் மக்களின் குமுறல்கள்

திருவொற்றியூர் மண்டலம் 1. எல்லைக்கு உட்பட்ட பகுதி இது ராஜா சண்முகம் நகர் மக்களின் குமுறல்கள்  நமது நகர் முழுவதும் சுற்று பயணம் செய்ததில் மக்களின் என்ன குமுறல்கள் அறிய முடிந்தது நமது நகரம் சென்னை நகரமாக இருந்தாலும் சென்னை மாநகராட்சி நகரத்தின் இணைந்து இருந்தாலும் மாநகராட்சி தரத்தில் நமது ஊர் இல்லை ஒரு மாநகராட்சில் இணைக்க பட்ட ஊர் என்றால் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும் அல்லது அவை தானாக ஏற்படுத்த பட வேண்டும்  அல்லது ஏற்படுகள் செய்ய வேண்டும் இது மாநகரத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் 1.கரண்ட் ஒயர்கள் பூமிக்கடியில் இருக்க வேண்டும் 2.மெட்ரோ வாட்டர் இணைப்பு அனைவரின் வீட்டில்  இருக்க வேண்டும் 3.கழிவு நீர் அனைத்தும்  பாதாள சாக்கடையில் இணைத்து இருக்க வேண்டும் 4. போக்குவரத்து மினி பஸ் மூலமாகவும் இணைக்கப்பட வேண்டும் 5.ஒரு பூங்கா பார்க் இருக்க வேண்டும் நகரின் முக்கிய இடத்தில் ஒரு நூலகம் இருக்க வேண்டும் மேலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும் இப்படி பட்ட வசதிகள் இருந்தால் தான் இது சென்னை மாநகரத்தில் எல்லைக்கு உட்பட்ட ஊர் ஆகும் நமக்கு இது நாள்  வரை இந்த அடிப்படை வசதிகள் எதுவும் நமக்கு கிடைக்க வில்லை பின் எப்படி நமது நகரம் சென்னை மாநகரத்தின் ஒரு பகுதி ஆகா இருக்க முடியும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் நம்மை ஏமாற்றி கொண்டு உள்ளனர் இந்த குறைபாடுகள் அனைத்தும் நமது வலைதளத்தில் ஊர் மக்கள் சார்பாக பதிவு செய்யப்படும் இது எனக்கு தெரிந்த அடிப்படை தகவல் நமது ஊரில் என்னை விட தகவல் தெரிந்தவர்கள் சொல்லட்டும்  ஒரு  மாநகரத்தில் எப்படி பட்ட சலுகைகள் இருக்க வேண்டும் என்று பதிவு செய்தால் நானும் மேலும் நல்ல தகவலை தெரிந்து கொள்வேன் நமது நகரத்தையும்   நம்மை நமது நகரத்தையும் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளது  இது எனக்கு தெரியும் இன்று உங்களுக்கும் தெரிய படுத்தி விட்டேன் எங்கள் அணி வைர மோதிரம் சின்னம் நாங்கள் வெற்றி பெற்றால் நமக்கு கிடைக்க வேண்டிய அணைத்து அடிப்படை உரிமைகளும் நமக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் இந்த தகவல் கூட நமது ஊர் நிர்வாகிகள் அவர்களுக்கும் தெரியாது தெரிந்து இருந்தால் இந்த அடிப்படை உரிமை நமக்கு கிடைத்து இருக்கும் நன்றி நண்பர்களே நீங்கள் நிம்மதியாக இருக்கவும் நங்கள் உங்களுக்காக இருக்கிறேன் எங்கள் சின்னம் வைர மோதிரம் . சுக்கிரன் உச்சமாக இருக்கும் இன்றய தேதியில் சுக்கிரனின் ரத்தினம் வைரம் இது ஒரு நல்ல வாய்ப்பு சுக்கிர பகவான்  நமது நகரத்தின் மீது யோகம் செய்ய இந்த நேரத்தை பயன் படுத்தி சுக்கிர பகவானின் ரத்தினமான வைர மோதிரத்திற்கு உங்கள் பொன்னான வகை பதிவு செய்யவும் நண்பர்களே  நமது நகரம் சொர்க பூமியாக இருக்கும் நமது நகர் தமிழகத்திற்கு முன் உதாரண நகரமாக இருக்கும்  நன்றி நண்பர்களே நமது ஊர் சென்னை மாநகரத்தின் முதல் மண்டலா குழு சென்னை மாகாணத்தின் முதல் மண்டலமாமே இப்படி  உள்ளது  இதை நமது வலைதளத்தில் பதிவு செய்தல் உலகமே நம்மை திரும்பி பார்க்கும் நமது ஊர் ராஜா சண்முகம் நகர்  உலக தரத்தில் உயர்ந்து விடும் உயர்ந்தால் தான் இது சென்னை நகரம் 

வெள்ளி, 12 மே, 2017

மக்களின் குரல்

ராஜா சண்முகம் நகர் திருவொற்றியூர் மேற்கு  பகுதி 14 வது தெருவின் அவலநிலை இது  திறந்த நிலையில் கவாய்கள் இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் விழுந்து விடுகின்றனர்  கொசு உற்பத்தி இதன் மூலம் அதிகமாக உள்ளது  இரவு நேரத்தில் மக்கள் தூங்க கூட முடிய வில்லை சுத்தமாக வீட்டின் முன்பு சுகாதாரம் இல்லை மாவட்ட நிர்வாகம் நகர நிர்வாகம் இதை சீர் செய்து தர வேண்டும் என்பது மக்களின் விருப்பம் தமிழக அரசு இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு தர வேண்டும் 




புதன், 10 மே, 2017

நமது முகவரி நமது அடையாளம்

நமது ஊர் மக்களுக்காக ஒரு வலைத்தளம் உருவாக்கப்பட்டு உள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றும் உங்களுடன்  இந்த குழுவின் மூலம்  இணைந்து இருப்போம் என்பதை மகிழ்ச்சியுடன்  வலைத்தளம்  முகவரி  www.rsntvt.blogspot.com 

மக்களின் குரல் அடிப்படை தேவை

திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான   மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...